"இப்போது, தற்போதைய தருணத்தில், நாம் அனைவரும், பௌதிக சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். இதை நீங்கள் சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். அரசாங்கத்தைப் போல். இந்த அரசாங்கம், அது ஒரு சக்தி, வேலை செய்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், சிறைச்சாலை, அதுவும் மற்றொரு சக்தி வேலை செய்துக் கொண்டிருக்கிறது. ஆனால் குடிமக்கள் நடுத்தரமானவர்கள். அவர்கள் சிறைச்சாலை சுவர்ரின் வெளியே இருக்கலாம் மேலும் சிறைச்சாலை சுவற்றின் உள்ளேயும் இருக்கலாம். ஆகையினால் அவர்கள் நடுத்தரமானவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் அரசாங்கத்தின் சட்டத்தை கடைபிடிக்கும் பொழுது, நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள். நீங்கள் அரசாங்கத்தின் சட்டத்தை கடைபிடிக்கவில்லை என்றால், நீங்கள் சிறையினுள் இருப்பீர்கள். எனவே உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஒன்று... அது உங்கள் விருப்பம். அரசாங்கத்திடம் பல்கலைக்கழகம் இருக்கிறது, அத்துடன் குற்றவியல் துறையும் இருக்கிறது. அரசாங்கம் ஆதரவு கோரி செல்லவில்லை; மாறாக, அரசாங்கம் ஆதரவு கோருகிறது அதாவது "நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு வாருங்கள். கற்றவர்களாக மாறுங்கள். முன்னேற்றம் அடையுங்கள்." ஆனால் அது நம் விருப்பம் நாம் சிலநேரத்தில் சிறைக்குச் செல்வோம். அது அரசாங்கத்தின் தவறல்ல. அதேபோல், இந்த பௌதிக உலகத்திற்கு வந்திருக்கிறவர்கள், அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக இருக்க வேண்டியவர்கள், பகவானின் சட்டத்திற்கு கீழ்ப்படியாதவர்கள்."
|