TA/730818 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் இந்த உடலை பாதுகாக்க மிகவும் அதிகமாக அக்கரை எடுத்துக் கொள்கிறோம், ஆனால் இந்த உடல் கடைசி காலத்தில் மலமாக, மண்ணாக அல்லது சாம்பலாகிவிடும். எனவே முட்டாள் மக்கள் வாழ்க்கையில் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், 'அனைத்திற்கும் பிறகு , இந்த உடல் முடிவடைந்துவிடும். இந்த உடல் இருக்கும்வரை, புலன்களும் இருக்கும், நாம் அனுபவிப்போம். ஏன் இவ்வளவு கட்டுப்பாடு—தவறான உடலுறவு கூடாது, சூதாட்டம் கூடாது, கூடாது...? இவை அனைத்தும் முட்டாள்தனம். நாம் வாழ்க்கையை அனுபவிப்போம்'. இதுதான் நாத்திகர் வாழ்க்கை. முட்டாள்தனமான வாழ்க்கை. அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே அனைத்தும் இந்த உடல்தான் என்பதல்ல. இதுதான் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டிய பாடம், ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன, ஆன்மீக அறிவு என்றால் என்ன. ஆனால் அனைத்து போக்கிரிகளுக்கும், அவர்களுக்கு தெரியவில்லை. ஆகையினால் கிருஷ்ணர் முதலில் அர்ஜுனருக்கு விளக்கினார்: அஷோச்யான் அன்வஷோசஸ் த்வம்ʼ ப்ரஜ்ஞா-வாதாம்ʼஷ் ச பாஷஸே (BG 2.11). 'உண்மை எதுவென்று உனக்கு தெரியாது, மேலும் மிகவும் கற்றறிந்த மனிதன் போல் பேசுகிறாய். சும்மா உண்மை எதுவென்று புரிந்துக் கொள்ள முயற்சி செய்.' ந த்வ் ஏவாஹம்ʼ ஜாது (BG 2.12)."
730818 - சொற்பொழிவு BG 02.12 - இலண்டன்