TA/730821 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இன்று நாம் ப்ரம்ம-சம்ஹிதையை பாராயணம் செய்தோம், சிந்தாமணி ப்ரகர சத்மஷு கல்ப வ்ருக்ஷ லக்ஷாவ்ருதேஷு சுரபிர் அபிபாலயந்தம் (பி.ச 5.29). கிருஷ்ணா பசுக்களை பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு மாடுகள் மீது அதிக பிரியம். சுரபி. அவை சாதாரண மாடுகள் அல்ல. ஆன்மிக உலகில் எல்லாமே ஆன்மிகம்தான். எனவே ஒரு கிரகம் உள்ளது, கோலோக-நாம்னி. எனவே அதுவே மிக உயர்ந்த கிரகம். கோலோக-நாம்னி நிஜ-தாம்னி. அதுதான் தனிப்பட்ட வசிப்பிடம். கோலோக-நாம்னி நிஜ-தாம்னி தலே ச தஸ்ய (பி.ச 5.43). அந்த கிரகத்தின் கீழ் வேறு கிரக அமைப்புகள் உள்ளன. அவை தேவி-தாம, மகேச-தாம, ஹரி-தாம என்று அழைக்கப்படுகின்றன. இப்போது இந்த பிரபஞ்சம், இந்த பெளதிக உலகம், தேவி-தாம என்று அழைக்கப்படுகிறது. தேவி-தாம. இது பெளதிக சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்ரிஷ்டி-ஸ்திதி-ப்ரளய-ஸாதன-ஸக்திர்-ஏக சாயேவ யஸ்ய புவனானி விபர்த்தி துர்கா (பி.ச 5.44). இந்த சக்தியும் உருவகப்படுத்தப்பட்டு, துர்காதேவி என அழைக்கப்படுகிறது.
730821 - சொற்பொழிவு உற்சவ ஸ்தாபனம், ஸ்ரீ ஸ்ரீ ராதா கோகுலாநந்தா - இலண்டன்