"எனவே இங்கே நீங்கள் ஆறு, கடல், மலைகள் மற்றும் மரங்கள் மற்றும் கொடிகள், அவை அனைத்தும் உங்களுக்கு மிகவும் சேவை செய்யும், நான் என்ன சொல்கிறேன் என்றால், தொடர்ந்து, நீங்கள் கிருஷ்ணர்க்கு கீழ்படிந்து இருந்தால். இதுதான் நடைமுறை. பலந்தி ஒளஷதயஹ். இன்றைக்கு நமக்கு தெரியாது. நாம் நோய்வாய்ப்பட்டவுடன் மருத்துவரிடம் அல்லது மருந்துக் கடைக்குச் செல்கிறோம். ஆனால், காட்டில் எல்லா மருந்துகளும் உள்ளன. அனைத்து மருந்துகளும் உள்ளன. சுலபமாக எந்த வகை நோய்க்கு எந்த செடி மருந்து என்பதை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும். பலந்தி ஒளசதயஹ் ஸர்வா காமம் அன்வ்ருது தஸ்ய வை. மற்றும் பருவ மாற்றங்களுக்கு ஏற்ப நீங்கள் பழங்கள், பூக்கள் மற்றும் மருந்துகள் மற்றும் அனைத்தையும் பெறுவீர்கள். மகாராஜா யுதிஷ்டிரரின் காலத்தில் இவை அனைத்தும் இயற்கையால் வழங்கப்பட்டன, ஏனெனில் மகாராஜா யுதிஷ்டிரர் கிருஷ்ண உணர்வுடன் இருந்தார், மேலும் அவர் தனது ராஜ்யத்தையும், அனைத்து குடிமக்களையும் கிருஷ்ண உணர்வுடன் பராமரித்தார்."
|