TA/730829 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இந்த கர்ம-வாத, அதாவது நீங்கள் ஒழுக்கத்தை பின்பற்றினால், நல்ல முடிவை பெறுவீர்கள்... ஆனால் எங்கே உங்கள் ஒழுக்கம்? ஏனென்றால் நீங்கள் பகவானிடம் கீழ்ப்படியாதவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே, நீங்கள் ஒழுக்கக்கேடானவர்களாக இருக்கிறீர்கள். மிக உயர்ந்த அதிகாரிக்கு கீழ்ப்படியாமல் இருக்கிறீர்கள். அங்கே மற்றொறு உதாரணம் உள்ளது, ஒரு கதை, அதாவது ஒரு திருட்டு கும்பல், அவர்கள் வேறுபட்ட வீடுகளில் இருந்து சில பொருள்களை திருடினார்கள், பிறகு கிராமத்திற்கு வெளியே அவர்கள் தங்களுக்குள் அந்த பொருள்களை பங்கிடுகிறார்கள். ஆக ஒரு திருடன் கூறுகிறான், 'தயவுசெய்து ஒருவரும் ஏமாற்றப்படாமல் அதை ஒழுக்கத்தோடு பங்கிடுங்கள்' இப்போது சும்மா கற்பனை செய்யுங்கள், பொருள்கள் திருடப்பட்டது. அங்கே ஏது ஒழுக்கம்? ஆனால் பங்கிடும் பொழுது, அவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி நினைக்கிறார்கள். அடிப்படை கொள்கை ஒழுக்கக்கேடானது. அங்கே ஏது ஒழுக்கம்? அதேபோல், வேத உத்தரவுபடி, ஈஷாவாஸ்யம் இதம்ʼ ஸர்வம் (ISO 1): அனைத்தும் முழு முதற் கடவுளுக்கு சொந்தமானது. அது அவருடைய சொத்து. எனவே அனைத்து கிரகமும் பகவானின் சொத்து, அனைத்து அண்டங்களும் பகவானின் சொத்து. ஆனால் நீங்கள் 'இது என் சொத்து' என்று சொந்தம் கொண்டாடும் பொழுது, எங்கு இருக்கிறது ஒழுக்கம்?"
730829 - சொற்பொழிவு BG 02.26-27 - இலண்டன்