TA/730906 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஸ்டாக்ஹோம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
" நாயம் தேஹோ தேஹா-பாஜாம் நிர்லோகே கஸ்டான் காமான் அர்ஹதே வித்புஜாம்யே (SB 5.5.1). இந்த பகல்நேரமோ அல்லது இரவுநேரமோ நாம் மிக கடினமா உழைக்கிறோம், ஆனால் நோக்கம் என்ன? நோக்கம் என்னவென்றால் புலன்களின் திருப்திக்காக. உலகெங்கும் உள்ள மக்களிடம் கேளுங்கள், முக்கியமாக மேற்கத்திய நாட்டில். அவர்கள் பலவாறு திட்டமிடுகிறார்கள்.நேற்று, நாங்கள் விமாத்தில் வந்தபோது அந்த இரண்டுமணி நேரமும் ஒருவர் வேலை செய்துகொண்டிருந்தார், எதோ கணக்கு செய்துகொண்டிருந்தார். எனவே எல்லோரும் மும்முரமாக மிகவும் மும்முரமாக, ஆனால் நாம் அவரை கேட்டால், 'ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள்? இதன் நோக்கம் என்ன?’ நோக்கம், அவர் புலனுகர்ச்சியை தவிர சொல்வதற்கு எதுவும் இல்லை. அவ்வளவுதான். அவருக்கு நோக்கமில்லை. 'எனக்கு ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது, அவர்களை நான் பராமரிக்க வேண்டும்' அல்லது 'எனக்கு மிக அதிகமான பொறுப்புகள் இருக்கிறது' என்று அவர் நினைக்கலாம். ஆனால் அது என்ன? அது வெறும் புலனுகர்ச்சிதான். "
730906 - சொற்பொழிவு SB 05.05.01-8 - ஸ்டாக்ஹோம்