"இந்த பௌதிக உடல் என்னுடைய மேற்போர்வை, சட்டையும் மேல் உடுப்பும் போல. ஆகையால் அந்த... இப்பொழுது நான் இருக்கிறேன். எப்படியோ, நான் இந்த ஜட உடலில் அடைப்பட்டிருக்கிறேன், ஆனால் நான் ஆன்மீக ஆன்மா. அது தான் ஆன்மீக ஆற்றல். மேலும் இந்த பௌதிக உலகம் பௌதிக பொருள்களால் செய்ப்பட்டிருப்பது போல், அதேபோல், அங்கே மற்றொரு உலகம் இருக்கிறது, அந்த தகவல்களை நீங்கள் பகவத் கீதையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம், பரஸ் தஸ்மாத் து பாவோ (அ)ன்யோ (அ)வ்யக்தோ (அ)வ்யக்தாத் ஸனாதன꞉ (BG 8.20). அங்கே மற்றொரு இயற்கை இருக்கிறது, இயற்கையின் மற்றொரு விரிவாக்கம், அதுதான் ஆன்மீகம். அதன் வேறுபாடு என்ன? அதன் வேறுபாடு என்னவென்றால், இந்த பௌதிக உலகம் நிர்மூலமாக்கப்படும் பொழுது, அது அப்படியே இருக்கும். எவ்வாறு என்றால் நான் ஆன்மீக ஆன்மா என்பது போல். இந்த உடல் அழிக்கப்படும் பொழுது, நான் அழிக்கப்படுவதில்லை, ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (BG 2.20). இந்த உடலின் அழிவிற்குப் பிறகு, ஆன்மா அழிக்கப்படுவதில்லை. ஆன்மா சூக்கும உடலில் அங்கே இருக்கும்: மனம், அறிவு மற்றும் தன்முனைப்பு. எனவே அந்த மனம், அறிவு மேலும் தன்முனைப்பு, அவனை மற்றொரு ஸ்தூல உடலுக்கு கொண்டு செல்கிறது. அதை ஒரு உடலைவிட்டு ஆன்மா மற்றொரு உடலுக்கு செல்கிறது என்று கூறுகிறோம்."
|