TA/730910 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஸ்டாக்ஹோம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் உங்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் முன், உங்கள் தாய் அல்லது தந்தையால் கொலை செய்யப்படலாம். ஏனென்றால் அந்த செயல் நடந்துக் கொண்டிருக்கிறது, கருக்கலைப்பு. எனவே நீங்கள் ஒரு பணக்கார தாய் அல்லது ஏழைத்தாய் அல்லது கருப்பான தாய் அல்லது வெள்ளையான தாய் அல்லது கற்றறிந்த தாய் அல்லது முட்டாளான தாய், இவர்களில் யார் கருவில் இருந்தாலும், கருவறையில் இருக்கும் வலி ஒரே மாதிரி தான் இருக்கும். நீங்கள் பணக்கார தாயின் கருவில் இருப்பதால், கருவறையில் இருக்கும் பொழுது இருக்கும் வலி இருக்காது என்று அர்த்தமல்ல. அதே வலி இருக்கும். எனவே ஜென்ம. பிறகு, மறுபடியும் நீங்கள் ஒரு ஜட உடலை ஏற்றுக் கொண்டவுடனே, நீங்கள் உடல் சம்மந்தமான வலியையும் வேதனையும் அனுபவிக்க வேண்டும். பிறகு, மரணம் அடையும் நேரத்திலும் அதே வேதனையான நிலை. ஆகையால் ஒருவர் பணக்காரனாக இருந்தாலும், ஒருவர் ஏழையாக இருந்தாலும் அது முக்கியமல்ல, அந்த பௌதிக நிலை, இருவரும் துன்பப்பட வேண்டும்."
730910 - சொற்பொழிவு SB 05.05.05 - ஸ்டாக்ஹோம்