"ஆக நாம் கிருஷ்ணரை மறந்துவிட்டோம், நாம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம், ஆனால் நாம் கிருஷ்ணரின் அங்க உறுப்புகளாக இருப்பதால், கிருஷ்ணர் ஆதரவை பெற வருகிறார் அதாவது "நீங்கள் ஏன் துன்பப்படுகிறீர்கள்? நீங்கள் சும்மா என்னிடம் சரணடையுங்கள், நான் உங்களுக்கு சகல பாதுகாப்பும் கொடுக்கிறேன்." இல்லை, அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆகையினால், ஒருவர் பயிற்சி அளிக்கப்படும் போது... எவ்வாறு கிருஷ்ணரிடம் சரணடைவது என்று, அது தான் பக்தி தொண்டு, பயிற்சி, பயிற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உண்மையில் ஒருவர் மிகவும் நேர்மையாக கிருஷ்ணருக்கு தொண்டு செய்ய விரும்பினால்... கிருஷ்ணர் அனைவருடைய இதயத்திலும் இருக்கிறார். ஈஷ்வர꞉ ஸர்வ-பூதானாம்ʼ ஹ்ருʼத்-தேஷே அர்ஜுன திஷ்டதி (BG 18.61). எனவே நீங்கள் உண்மையாக சேவை செய்கிறீர்களா அல்லது சில உள்நோக்கத்துடன் சேவை செய்கிறீர்களா என்பதை அவர் புரிந்துக் கொள்வார்
|