"உங்கள் மேற்சட்டையும் சட்டையும் போல. மேற்சட்டைக்கு கைகள் இருக்கிறது. ஆனால் அது கைகள் அல்ல. உண்மையான கைகள் மேற்சட்டையினுள் இருக்கிறது. எனவே உண்மையில் மேற்சட்டைக்கு கைகள் இல்லை. ஆக மேற்சட்டைக்கு புலன்கள் இருக்கிறது என்ற கேள்வி எங்கிருக்கிறது? அதேபோல், இந்த ஜட உடல் மூலப் பொருளால் ஆன ஒரு கட்டி. பொம்மைகளைப் போல். பொம்மைகள் புற்களால் தயாரிக்கப்படுகிறது, கைகள் மேலும் கால்கள், பிறகு அது பூசப்படுகிறது, மேலும் அது ஒரு அழகான பொம்மையாகிறது. அதேபோல், நமக்கு கைகளும் கால்களும் இருக்கிறது, மேலும் இந்த பொருள் பிளாஸ்டர் ஆகும். ஆகையினால் உண்மையான கைகளும் கால்களும் போய்விடும் பொழுது, அது இனிமேல் கைகளும் கால்களும் அல்ல; அவை வெறுமனே மூலப் பொருளால் ஆன ஒரு கட்டி. ஆகையினால், யாரேனும் இந்த உடல் "நான்," என்று நினைத்தால், அவன் ஒரு முட்டாள். நீங்கள் ஒரு மேற்சட்டை, நீங்கள் ஒரு சட்டை, என்று நினைத்தால், பிறகு நீங்களும் ஒரு முட்டாள்."
|