"இங்கே, எல்லோரும் பலனளிக்கும் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள், கர்மா—கர்மா இந்த வாழ்க்கையிலும் மேலும் கர்மா அடுத்த பிறவியிலும். ஆகவே பெரிய தியாகம் செய்வது, தர்மம் கொடுப்பது, பக்தி செயல்கள், அவையும் கர்மா தான். அவை அடுத்த பிறவியில் வாய்ப்பை அளிப்பதற்கானது, சொர்கலோக கிரகத்தில் ஒரு நிலை, அல்லது வாழ்க்கைத் தரம் மிக, மிக வசதியாக, அதைப் போல் உள்ள மற்ற உயர்ந்த கிரக அமைப்பில், இந்த கிரகத்தைவிட பல ஆயிரம் மடங்கு வசதியான வாய்ப்பை அளிப்பதற்கானது. ஆனால் இதுவும் கர்மா தான். காங்க்ஷந்த꞉ கர்மணாம்ʼ ஸித்திம் யஜந்த இஹ தேவதா꞉."
|