"சில வேளைகளில் நாம் நமது மனசாட்சியிடம் விசாரிக்கிறோம். மனசாட்சி கூறும், "வேண்டாம், இதை செய்ய வேண்டாம்." ஆனாலும், நாம் செய்வோம். ஆனாலும் நாம் செய்வோம். . . அது நமது அவித்யா. ஏனென்றால் அறியாமையினால் நமக்கு தெரிவதில்லை, பரமாத்மா "இதை செய்யாதே" என்று தடுத்தும் கூட நாம் செய்கிறோம். அது அனுமந்தா எனப்படுகிறது. பரமாத்மாவின் அனுமதி இல்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால் "நான் அதை செய்தாக வேண்டும்" என்று வலியுறுத்தும்போது அவர் "சரி பரவாயில்லை, நீர் அதைச் செய்துகொள், ஆனால் அதன் விளைவாக துன்பப்படுவீர்" என்று கூறுவார்."
|