"கிருஷ்ணர் என்ன கூறினார்? கிருஷ்ணர் சொன்னார் "ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஶரணம்ʼ வ்ரஜ" (BG 18.66). இது "வேதாந்த". நீங்கள் கிருஷ்ணரிடம் எவ்வாறு சரணடைவது என்பதை கற்றுக் கொண்டால், அதுதான் உண்மையாக "வேதாந்ததை" புரிந்துக் கொண்டதாகும். "பஹூனாம்ʼ ஜன்மனாம் அந்தே" (BG 7.19). இந்த முடிவுரை வேதாந்திகளிடமிருந்து வந்தது, வேதாந்திகள் என்று அழைக்கப்படுபவர்கள். "பஹூனாம்ʼ ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம்ʼ ப்ரபத்யதே". இதுதான் "வேதாந்ததை" இறுதியாக புரிந்துக் கொண்டதாகும்."வாஸுதேவ꞉ ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப꞉" ஒருவர் எல்லாமே கிருஷ்ணர் தான், கிருஷ்ணர் தான் எல்லாவற்றுக்கும் தோற்றம் என்பதை புரிந்துக் கொண்டால்... அதுதான் "வேதாந்த", "ஜன்மாத்ய் அஸ்ய யத꞉" (SB 1.1.1)."
|