TA/731005 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் வீடு என்றும், மனைவி, குழந்தைகள் என்றும் நினைத்துக்கொண்டு இவற்றுடன் மிகவும் பற்றுக்கொள்கிறோம். ஆனால் இங்கு...ஞானா என்றால் அசக்திர் அனபிஷ்வங்கஹ. அசக்திர். நீங்கள், அதனால், ஒரு குறிபிட்ட வயதில், வேத நாகரீத்தின் படி இந்த்ப் பற்றை விட்டுவிட நிர்பந்திக்கப்படுகிறீர்கள். இயற்கையாகவே ஒருவர் மனைவி, குழந்தைகள், வீடு போன்றவற்றுடன் பற்றுக்கொள்கிறார். ஆனால் வேத நாகரீகம் சொல்கிறது.. அது சரிதான் ஆனால் ஐம்பது வயது வரைதான் பற்றுடன் வாழலாம். ஆனால் பஞ்சாசோர்த்வம் வனம் வ்ரஜேத். ஐம்பது வயது கடந்த பின் இல்வாழ்கையை துறந்துவிட வேண்டும். . வனம் வ்ரஜேத். தவம் செய்ய காட்டுக்குச் செல்ல வேண்டும். இதுவே ஒழுங்குமுறை. தற்சமயம் இந்தக் கணத்தில், இவ்வுலகெங்கும், அவர் இறக்கும் தருவாயிலும், அப்போதும் அரசியல் வாழ்வுமீது, சமூக வாழ்வுமீது, குடும்ப வாழ்வுமீது பற்றுடனேயே இருக்கிறார். இது ஞானமல்ல. இது அறியாமை. நீங்கள் பற்றில்லாதிருக்க வேண்டும்.
731005 - சொற்பொழிவு BG 13.08-12 - மும்பாய்