TA/731009 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நான் உன்னை பார்க்கிறேன், உங்கள் கைகள், கால்கள் மற்றும் தலை, ஆனால் உண்மையில் நான் உங்களை பார்க்கவில்லை. நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள், என் கைகள் மற்றும் கால்களை நீங்கள் பார்கிறீர்கள், ஆனால் நீங்கள் என்னைப் பார்க்கவில்லை. எனவே கடவுளின் அம்சங்களான ஆத்மாவின் துகள்களை நம்மால் காண இயலாது. எப்படி கடவுளை பார்க்க இயலும்? மிகவும் நுண்ணியதான, மமைவாம்சோ ஜீவபூதாஹ (BG 15.7). எல்லா உயிர்வாழிகளும் கிருஷ்ணரின் அம்சங்களே. நம்மால் கடல் நீரின் ஒரு துளியை கூட அடையாளம் காணமுடியாத போது எவ்வாறு கடலை அடையாளம் கண்டுகொள்ள முடியும்? அதுபோலவே உயிர்வாழிகளான நாம் ஆன்மீக ஆத்மாவான கிருஷ்ணரின் வெறும் சிறு துகள். மமைவாம்சோ ஜீவ பூதாஹ. எனவே நம்மால் காண இயலாது. எந்த ஒரு மருந்துவரும் ஆத்மாவை எப்போதும் கண்டதில்லை, ஆனால் ஆத்மா இருப்பதை உணர்கிறார்கள். தற்சமயம் ஒரு மருத்துவரோ, இருதயநிபுணரோ ஒத்துக்கொள்கிறார்கள் ஆம் ஆத்மா இருக்கிறது, ஆனால் எங்களால் காண முடியவில்லை."
731009 - சொற்பொழிவு BG 13.15 - மும்பாய்