"எனவே பகவான், அனுபவிப்பதற்கு அவருக்கு உதவி செய்வது, பகவானின் அங்க உறுப்புக்களின் கடமை. அதுதான் பக்தி. பக்தி என்றால் ஆனுகூல்யேன க்ருʼஷ்ணானுஶீலனம் (CC Madhya 19.167). அனுகூல. அனுகூல என்றால் சாதகமாக, க்ருʼஷ்ணானுஶீலனம், கிருஷ்ண உணர்வு—கிருஷ்ணரை எவ்வாறு சந்தோஷப்படுத்துவது என்று எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பது. அதுதான் பக்தி. ஆனுகூல்யேன க்ருʼஷ்ணானுஶீலனம். கோபியர்களைப் போல். முதல்-தரமான உதாரணம், கோபியர்கள் அல்லது வ்ருʼந்தாவன குடியிருப்பாளர்கள். அவர்கள் அனைவரும் கிருஷ்ணரை மகிழ்விக்க முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். அதுதான் வ்ருʼந்தாவன. இங்கேயும், நீங்கள் கிருஷ்ணரை மகிழ்விக்க முயற்சி செய்தால், இதுவும் வ்ருʼந்தாவனமாக, வைகுந்தமாக மாற்றப்படும்."
|