"எனவே நாங்கள் இந்த நிலைமையை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் ஏனென்றால், நீங்கள் இந்த ஜட உடலைப் பெற்ற உடனே, இது துன்பம் தான். மகிழ்ச்சி என்ற கேள்விக்கு இடமில்லை. ஆனால் மாயையின் சக்தியால், மாயையால் நாம் அனுபவித்துக் கொண்டிருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதைதான் மாயை என்று அழைக்கின்றோம். அதே உதாரணத்தைப் போல்: ஒரு பன்றி மலம் உண்ணுகிறது, ஆனால் அது அனுபவித்துக் கொண்டிருப்பதாக அது நினைக்கிறது. இதை ப்ரக்ஷேபாத்மிகா-ஶக்தி என்று அழைக்கின்றோம். பன்றிமட்டுமல்ல; மனித சமூகத்தில் கூட, யாரோ மிகவும் அருவருக்கத்தக்க, மிகவும் அழுகிய மீனை உண்ணுகிறான், இருப்பினும், அவன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறான்."
|