"அனைவரும் கடவுள் உணர்வு அல்லது கிருஷ்ண உணர்வு இல்லாமல் துன்பப்படுகிறார்கள். எனவே இந்த கிருஷ்ண உணர்வை விநியோகிப்பதுதான் மிகப்பெரிய மனிதாபிமானப் பணி, பொதுநல நடவடிக்கைகள். ஆகவே அது இந்தியர்களின் கடமையாக இருந்தது. பாரத-பூமிதே மனுஷ்ய-ஜன்ம ஹேலா யாரா. இந்தியாவில் மனிதனாகப் பிறந்த எவரும், அவரது கடமை என்னவென்றால், கிருஷ்ண உணர்வில் அவரது வாழ்க்கையை முழுமைப்படுத்தி அதனை இந்த உலகம் முழுவதும் விநியோகிப்பதுதான். அது அவரது கடமை. ஆனால், அவர்கள் செய்வதில்லை. ஏதோ ஒரு வழியில் இந்த இளம் ஐரோப்பியர்களையும் அமெரிக்கர்களையும் திரட்டியிருக்கிறேன். அவர்கள்தான் இந்த இயக்கத்துக்கு உதவுகிறார்கள்."
|