" கிருஷ்ணா கூறுகிறார் பூமிர் அப்போ 'நலோ வாயு꞉ கம் மனோ, பின்னா மே ப்ரக்ருதீர் அஷ்டதா (BG 7.4) எனவே அது கிருஷ்ணரிடமிருந்து வெளிவந்துள்ளது. யதோ வா இமானி பூதானி ஜாயந்தே (தைத்திரிய உபநிஷத் 3.1). இது வேதங்களின் கூற்றாகும் மற்றும் [.. . ]. அப்படியென்றால், ஒரு நபரால் எப்படி இத்தனை பெரிய அளவிலான பொருட்களை உருவாக்க முடியும், குறைந்தபட்டசம் ஒரு நபரிடமிருந்து எப்படி இவை உருவானது என்பதை நீங்கள் எவ்வாறு புரிய வைக்க முடியும்? இவை அறிவியல் பூர்வமாக விளக்கப்பட வேண்டும், எங்கிருந்து இவ்வளவு பெரிய நீர் திரள் வந்தது. அறிவியல் ரீதியாக விளக்க வேண்டும். இல்லாவிட்டால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? சும்மா "அது கிருஷ்ணரிடமிருந்து வந்துள்ளது," என்று சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்."
|