“தகுதி இல்லை என்றால் எப்படி பெறுவது? ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியாக வேண்டும் என்றால், அரசினால் கொடுக்க முடியும். ஆனால் அதற்கு தகுதி இருக்க வேண்டும். வெறுமனே தெருவில் துப்புரவு பணியாளராக இருந்து கொண்டு, “நான் உயர்நீதிமன்ற நீதிபதியாக வேண்டும்,” என்று ஆசைப்பட்டால் அரசாங்கம் என்ன முட்டாளா? ஆசைப்பட வேண்டும்; அதேசமயம் தகுதியும் இருக்க வேண்டும். அப்போது பலனை அளிப்பது கிருஷ்ணரின் கையில் இருக்கும். என்ன கஷ்டம்? எதுவாயினும்… முதலில் தகுதி பெற வேண்டும், பிறகு ஆசைப்பட வேண்டும். ஒரு போக்கிரியாக இருந்து கொண்டு மில்லியன் கணக்கான டாலர்களுக்கு ஆசைப்படுவானேன்? நேர்மையாக உழைக்க வேண்டும்.”
|