"எவ்வாறு என்றால் நான் முதலில் என் குரு மஹாராஜை பார்த்த போது—என் நண்பன் என்னை அங்கு அழைத்துச் சென்றார்—என் முதல் கருத்து நான்... "பகவான் சைதன்யரின் இயக்கத்தைப் பற்றி பரப்புவதற்கு சரியான மனிதர் இங்கு இருக்கிறார்" என்று நான் கருத்து தெரிவித்தேன். மேலும் அவரும் கூறினார்: "மேற்கத்திய நாட்டினருக்கு போதிக்க சரியான மனிதர் நீங்கள்தான்." நான் அவ்வாறு பாராட்டினேன், மேலும் அவரும் என்னை அவ்வாறு பாராட்டினார். அதுதான் முதல் சந்திப்பு. என்னை அங்கு அழைத்துச் சென்ற நண்பன் என் கருத்தைப் பற்றி கேட்டார் மேலும், "சைதன்யரின் வழிபாட்டைப் பற்றி உலகம் முழுதும் போதிக்க சரியான மனிதர் இங்கே இருக்கிறார்." அவர் அதை செய்கிறார், நான் செய்ததை. உண்மையில் அவர் அதை செய்துக் கொண்டிருக்கிறார். எனவே சரியான விஷயம் சரியான கைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, மேலும் நீங்கள் அனைவரும் நேர்மையானவர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் நீங்கள் செய்யும் விதத்தால் அதை தனித்துவமானதாக இருக்கும்படி செய்யுங்கள்."
|