"ஒருவன் சுதர்மத்தை கைவிட்டு, த்யக்த்வா ஸ்வ-தர்மம், கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொண்டு கிருஷ்ணரிடம் சரணடைகிறான், ஆனால் எப்படியோ தீய சகவாசத்தினால், மாயையின் சூழ்ச்சியினால் அவன் மீண்டும் வீழ்ச்சி அடைகிறான். நம்முடைய பல மாணவர்கள் சென்றதைப் போல... பலர் அல்ல, சிலர். பாகவதம், யத்ர க்வ வாபத்ரம் அபூத் அமுஷ்ய கிம், அதாவது அவன் பாதி வழியில் வீழ்ச்சி அடைந்தாலும் "அதில் என்ன தவறு இருக்கிறது?" அதில் ஒரு தவறும் இல்லை என்கிறது. அவன் எதையோ பெற்றிருக்கிறான். அவன் கிருஷ்ணருக்கு ஏற்கனவே செய்த சேவை பதிவு செய்யப்பட்டுள்ளது. அது பதிவு செய்யப்பட்டுள்ளது"
|