TA/731201 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“தத் அபூத் அஸத் ஈஷ-ரிக்தம் (SB 1.15.21). கடவுள் இல்லாமல் எல்லாம் பூச்சியமாகி, வெறுமையாகிப் போய்விடும். அவ்வளவுதான். நவீன நாகரிகம் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, ஆனால் கடவுள் உணர்வு இல்லாமல், அதாவது எந்த…, எந்த…, எந்த கணத்திலும் அது முடிந்து விடலாம். அறிகுறிகள் இருக்கின்றன. எந்த கணத்திலும். தற்போது, இந்த கடவுளற்ற நாகரிகம், ஒரு போர் பிரகடனம் ஏற்பட்டவுடன், அமெரிக்கா அணுகுண்டை போடுவதற்கு தயாராக உள்ளது; ரஷ்யா… முதலாவதாக அணுகுண்டை போடும் நாடு வெற்றி பெறும். யாரும் வெற்றி பெறப் போவதில்லை, ஏனென்றால் இரு தரப்பும் போடுவதற்கு தயாராக உள்ளது. அமெரிக்காவும் முடிந்துவிடும் ரஷ்யாவும் முடிந்துவிடும். அதுதான் நிலை. வேண்டுமானால் நாகரிக முன்னேற்றம், விஞ்ஞான முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி என்பவற்றை மேற்கொள்ளலாம், ஆனால் அது கடவுளற்று இருந்தால், எந்த தருணத்திலும் அது முடிந்துவிடும். எந்த தருணத்திலும்.”
731201 - சொற்பொழிவு SB 01.15.21 - லாஸ் ஏஞ்சல்ஸ்