TA/731203 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இங்கே, மனிதன், அறியாமையில், அவர்கள் காம, பேராசை, மோஹம், கோபம் ஆகியவற்றுக்கு சேவகம் செய்கிறார்கள்—அவர்கள் பல விஷயங்களுக்கு சேவகம் செய்கிறார்கள். அவர்கள் சேவை செய்கிறார்கள். ஒரு மனிதன் மற்றொருவனை காமத்தால் கொன்றுக் கொண்டிருக்கிறான், காம ஆசையால். அல்லது மாயையால். எனவே பல விதமான காரணத்தால். எனவே நாம் சேவை செய்துக் கொண்டிருக்கிறொம். அதைப் பற்றி எவ்விதமான சந்தேகமும் இல்லை. நாம் சேவை செய்துக் கொண்டிருக்கிறொம். ஆனால் நாம், நம் காம, க்ரோத, லோப, மோஹ, மாத்ஸர்ய— காம, ஆசை, பேராசை, அவ்வாறு. இப்போது நாம் கற்றுக் கொள்ள வேண்டும், அதாவது பல விஷயங்களுக்கு சேவகம் செய்வதால், நாம் விரக்தி அடைந்திருக்கிறோம். இப்போது இந்த செவை செய்யும் மனப்பான்மையை கிருஷ்ணரின் பக்கம் திருப்ப வேண்டும். அதுதான் கிருஷ்ணரின் இயக்கம். ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஷரணம்ʼ வ்ரஜ (BG 18.66): "நீங்கள் ஏற்கனவே சேவகம் செய்கிறீர்கள். சேவகம் செய்யாமல் சுதந்திரமாக இருக்க முடியாது. ஆனால் உங்கள் சேவகம் தவறான இடத்தில் உள்ளது. ஆகையினால் உங்கள் சேவையை சும்மா என் பக்கம் திருப்புங்கள். பிறகு நீங்கள் சந்தோஷமடைவீர்கள்." அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம்."
731203 - சொற்பொழிவு SB 01.15.24 - லாஸ் ஏஞ்சல்ஸ்