"அந்த தடை உத்தரவு யாதெனில், "நீ கொலை செய்யக் கூடாது," ஆனால் அவன் கொலை செய்வான் மேலும் கொலை செய்வான் கொலை செய்வான் கொலை செய்வான், மேலும் கொலை செய்வான், அவன் திருப்தி அடைய விரும்புகிறான். சும்மா பாருங்கள். பைபளில் கூறப்பட்டுள்ளது, "நீ கொலை செய்யக் கூடாது," மேலும் அவர்கள் வெறுமனே கொலை செய்யும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள், மேலும் அவர்கள் ஆனந்தமாக இருக்க விரும்புகிறார்கள். சும்மா வேடிக்கையை பாருங்கள். ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், "ஆம், நீ அவ்வப்போது நிகழும் உலகப் போரால் கொல்லப்படுவாய். நீ கொல்லப்பட வேண்டும். நீ இந்த நிலைமையை உருவாக்கினாய். நீ கொல்லப்பட வேண்டும். நீ அமெரிக்கன் அல்லது ஆங்கிலேயன் அல்லது ஜெர்மன் அல்லது இது அல்லது அதுவாக இருக்கலாம். நீ உன் தேசத்தைப் பற்றி பெருமை கொள்ளலாம். ஆனால் நீ கொல்லப்பட வேண்டும்." இதுதான் நிலைமை. ஈஶ்வரஸ்ய விசேஷ்டிதம் (SB 1.15.24). "நீ பல விலங்குகளை கொன்று இருக்கிறாய். இப்போது மொத்த விற்பனை கொலை, ஒரு குண்டு, ஒரு அணுகுண்டு. கொல்லப்படு."
|