"மனித நாகரீகம் தபஸ்யாவைக் குறிக்கும், தபஸ்யா. உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், என் பொறுப்பு என்னவென்று. தபஸா ப்ரஹ்மசர்யேண ஶமேன ச தமேன ச (SB 6.1.13). ஒருவர் தபஸ்யா பயிற்சி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். தபஸ்யா. இதுதான் தபஸ்யா, சிறிய தபஸ்யா. தவறான உடலுறவு கூடாது, சூதாட்டம் கூடாது, மாமிசம் உண்ணக் கூடாது மேலும் போதைப் பொருள் கூடாது, இதுதன் தபஸ்யா, சிறிய தபஸ்யா. மாமிசம் உண்ணாமல் யார் மரணம் அடைகிறார்கள்? நம்மிடம் பல மாணவர்கள் இருக்கிறார்கள். பல வைஷ்ணவஸ் இருக்கிறார்கள், அவர்கள் மாமிசம் உண்பதில்லை. அவர்கள் இறந்துக் கொண்டிருக்கிறார்களா? இது வெறும் ஒரு தீய பழக்கம். ஆனால் நீங்கள் கொஞ்சம் பயிற்சி செய்தால்... ஆரம்பத்தில் அது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அது கஷ்டமானதல்ல. நான் நினைத்துக் கொண்டிருகிறேன்... எவ்வாறென்றால் ஒரு நற்பண்புகள் கொண்டவர் வந்தார், 'மாமிசம் உண்பதை எங்களால் விட்டுவிட முடியவில்லை. நான் விட்டுவிட விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியவில்லை'. அந்த பயிற்சி. அப்யாஸ-யோக-யுக்தேன சேதஸா (BG 8.8). எதையும் நீங்கள் பயிற்சி செய்யுங்கள், பழக்கம் இரண்டாம்பட்சம். எனவே பக்தர்களின் சேர்க்கையில், நீங்கள் இந்த தபஸ்யா பயிற்சி செய்ய முயற்சி செய்தால்... தபஸா ப்ரஹ்மசர்யேண, எந்த நோக்கமும் இல்லாமல் உடலுறவு கொள்ளக் கூடாது, அதுதான் ப்ரஹ்மசாரீ என்று அழைக்கப்படுகிறது."
|