“இக்காலம் வாக்குகளின் காலம். எந்த ஒரு அயோக்கியனும் எப்படியாவது வாக்கினை பெற்று விட்டால், உயர்ந்த பதவியை அடைந்து விடுகிறான். இதுவும் ஸ்ரீமத் பாகவதத்தில் எழுதப்பட்டுள்ளது, அதாவது கலியுகத்தில் ஜனாதிபதி பதவியில் அல்லது அரச அரியணையில் அமர்வதற்கு தகுதியுள்ளவர் யார் என்று கருதப் போவதில்லை. எப்படியாவது தில்லுமுல்லுகள் மூலம் பதவியை ஆக்கிரமித்துவிடுவர். அதனால் மக்கள் துன்பப்படுகிறார்கள். இந்த ஜனநாயக காலத்தில், மக்களால் அரசு, மக்களுக்காக அரசு. மக்களால் அரசு என்றால், ஆமாம், உங்கள் பிரதிநிதியை நீங்களே தேர்ந்தெடுப்பீர்கள். நீங்கள் முட்டாள்களாக இருந்தால், பின்னர் இன்னும் ஒரு முட்டாளை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.”
|