"இஹா என்றால் ஆசை என்று பொருள். யஸ்ய, யாருடைய ஆசையும். கிருஷ்ணருக்கு எப்படி சேவை செய்வது என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார். உலகம் முழுவதிலிருக்கும் துணைக்கருவிகளை கொண்டு எப்படி கிருஷ்ணருக்கு சேவை செய்யலாம் என திட்டமிட்டுக்கொண்டிருப்பார், அத்தகைய நபர். இஹா யஸ்ய ஹரேர் தாஸ்யே. கிருஷ்ணருக்கு எப்படி சேவை செய்வது என்பதே அவரது முக்கிய நோக்கம். கர்மனா மானசா வாசா. ஒருவர் தனது செயல்களால், கர்மாவால், சிந்தனையால், அதை எவ்வாறு நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று திட்டமிடுவதன் மூலம் கிருஷ்ணருக்கு சேவை செய்யலாம். மனமும் வேண்டும். கர்மனா மானசா வாசா. மேலும் சொற்களால். எப்படி? பிரச்சாரம். அத்தகைய நபர், நிகிலாஸ்வ் அபி அவஸ்தாஸு, வாழ்க்கையின் எந்த நிலையிலும் அவர் இருக்கலாம் ... அவர் விருந்தாவனத்தில் இருக்கலாம் அல்லது நரகத்தில் இருக்கலாம். கிருஷ்ணரைத் தவிர, வேறு எவற்றுடனும், அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஜீவன் முக்தஸ் ச உஸ்யதே: அவர் எப்போதும் முக்தியடைந்தவர். அது தேவை"
|