"கிருஷ்ணரின் புனிதமான பெயர், நாராயண... அங்கே கிருஷ்ணருக்கு நூறு மற்றும் ஆயிரக்கணக்கான பெயர்கள் உள்ளன, முழு முதற் கடவுள். எனவே எந்த பெயரை நீங்கள் உச்சாடனம் செய்தாலும், நீங்கள் அதன் விளைவை பெறுவீர்கள். இது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அறிவுறுத்தல்கள். நாம்னாம் அகாரி ப³ஹுதா⁴ நிஜ-ஸர்வ-ஶக்திஸ் தத்ரார்பிதா நியமித꞉ ஸ்மரணே ந கால꞉ (Śikṣāṣṭaka 2). அந்த நபர், முழு முதற் கடவுள், மேலும் அவருடைய பெயர், அவை ஒரே மாதிரியானது. இது சைதன்ய மஹாபிரபுவின் அறிவுறுத்தல்கள். நாம் கிருஷ்ணரின் புனிதமான பெயரை உச்சாடனம் செய்தால், கிருஷ்ணர், பூரணமானவர், அது வெவ்வேறு அல்ல. அதுதான் கிருஷ்ணரின் முழுமையான ஆட்சி. கிருஷ்ணரும் இங்கு இருக்கும் அவருடைய திருவுருவமும் வெவ்வேறு அல்ல. கிருஷ்ணர் தானே தனிப்பட்ட முறையில் இருக்கும் போது செய்யும் அதே தாக்கம், அவருடைய உருவம் கொடுக்கும். அதுதான் கிருஷ்ணரின் முழுமையான ஆட்சி."
|