"யமராஜ ஒரு சிறந்த பக்தர், வைஷ்ணவ. நாம் யமராஜருக்கு பயப்படக் கூடாது. பக்தர்களாக இருப்பவர்கள், அவர்கள்... யமராஜ கூறுகிறார் அதாவது, "நான் அவர்களுக்கு மரியாதை, என்னுடைய வணக்கம் அளிகின்றேன்." அவர் தன்னுடைய தூதர்களுக்கு ஆலோசனை கூறுகிறார் அதாவது, "என் பக்தர்களிடம் செல்லாதே. நான் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டியவன். நீங்கள், ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்ய தயங்கும் நபர்களிடம் செல்லுங்கள். நீங்கள் அங்கு சென்று அவர்களை தீர்ப்புக்கு இங்கு அழைத்து வாருங்கள்." கிறிஸ்துவர்களும் இதை நம்புகிறார்கள் "தீர்ப்பு அளிக்கும் நாள்." தீர்ப்பு யமராஜாவால் அளிக்கப்படுகிறது. ஆனால் அவருடைய தீர்ப்பு அளிக்கும் நீதிமன்றத்திற்கு யார் போகிறார்கள்? குற்றவாளிகள், பக்தர் அல்லாதவர்கள், கிருஷ்ணர் பக்தர் அல்லாதவர்கள், அவர்கள் யமராஜாவின் நீதிமன்றத்திற்குச் செல்வார்கள். எனவே வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், எல்லோரும் கிருஷ்ண பக்தர்களாகிறார்களா என்று கவணிக்க வேண்டியது யமராஜாவின் கடமை."
|