"இந்த போக்கிரிகள், அவர்களுக்குத் தெரியவில்லை அதாவது அவனுடைய தனிப்பட்ட ஆர்வம் கிருஷ்ணர் என்று. அது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆகையினால் அவன் போக்கிரியாவான். மேலும் கிருஷ்ணர் கூறுகிறார். நாங்கள் இந்த வார்த்தைகளை உற்பத்தி செய்தோம் என்பதல்ல. கிருஷ்ணர் கூறுகிறார், ந மாம்ʼ துஷ்க்ருʼதினோ மூடா꞉ ப்ரபத்யந்தே நராதமா꞉ (BG 7.15). கிருஷ்ணர் அனைவரிடமும் கேட்கிறார், "தயவுசெய்து என்னிடம் சரணடையுங்கள். இந்த முட்டாள்தனமான ஈடுபாடுகளை விட்டுவிடுங்கள்." அதுதான் அவருடைய ஆர்வம், ஜீவாத்மாக்களின் ஆர்வம். நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்தாலும் அல்லது சரணடையாவிட்டாலும், கிருஷ்ணருக்கு அதனால் என்ன ஆதாயம் அல்லது இழப்பு? அவருக்கு பல வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். தனக்கு வேலைக்காரர்களை அவரால் படைக்க முடியும். உங்களுடைய சேவை அவருக்குத் தேவையில்லை. ஆனால் நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்து மேலும் அவருக்கு சேவை செய்தால், அது உங்கள் ஆர்வம். அது உங்கள் ஆர்வம். அவர்களுக்கு இது தெரியவில்லை."
|