"எனவே பக்தர்களுக்கு எவ்விதமான தனிப்பட்ட தீர்மானமும் இல்லை. அதுதான் கிருஷ்ண உணர்வின் செயல்பாடு. ஏவம்ʼ பரம்பரா-ப்ராப்தம் இமம்ʼ ராஜர்ஷயோ விது꞉ (BG 4.2). நாம் கிருஷ்ணரின் உத்தரவின்படி சீடர் பரம்பரை வழி முடிவெடுக்க வேண்டும், ஊடகங்கள் வழியாக, ஆன்மீக குரு வழியாக. அதுதான் தேவைப்படுகிறது. ஒரு பக்தன் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. கிருஷ்ணர் விரும்பினால்... யாரேனும் கூறினால் அதாவது, "நாம் கிருஷ்ணரை தனிப்பட்ட முறையில் பார்க்க முடியாது," பிறகு நீங்கள் கிருஷ்ணரின் பிரதிநிதி மூலம் முடிவெடுக்க வேண்டும். உங்கள் ஆன்மீக குரு, குரு, கூறினால், அதாவது "நீ இதை செய்," அது கிருஷ்ணரின் கட்டளை. அது கிருஷ்ணரின்... ஆகையினால் அது கூறப்பட்டுள்ளது, யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாத꞉. ஆன்மீக குருவை திருப்திப்படுத்துவதின் வழி, நீங்கள் முழு முதற் கடவுளை திருப்திப்படுத்துகிறீர்கள்."
|