TA/740109 - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே ஒவ்வொரு பக்தனும் கிருஷ்ணரிடம் அல்லது பகவானிடம் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும், கிருஷ்ணரின் பணியை செயல்படுத்த வேண்டும். கிருஷ்ணர் தானே வந்திருக்கிறார். கிருஷ்ணர் ஒரு பக்தனாக வந்திருக்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் வரும் போது, அவருடைய நிலையை பகவானாக நிறுவுகிறார், அனைத்து செல்வச் சிறப்புடன், ஆறு விதமான செழுமையுடன். மேலும் அவர் கேட்கிறார், அர்ஜுனன் மூலம், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஶரணம்ʼ வ்ரஜ (BG 18.66). இது கிருஷ்ணரின் கோரிக்கை, "நீ போக்கிரி..." ஏனென்றால் நாம் அனைவரும் கிருஷ்ணரின் அங்க உறுப்புகளாவோம். நாம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மன꞉ ஷஷ்டானி இந்த்ரியாணி ப்ரக்ருʼதி-ஸ்தானி கர்ஷதி (BG 15.7). இந்த பௌதிக உலகில் இருப்பு கொள்ள பெரும் போராட்டம், வெறுமனே மன ஊகத்தால். மன꞉ ஷஷ்டானி இந்த்ரியாணி. மேலும் இந்த்ரியாக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறது: வெறுமனே புலன்நுகர்வு, புலன்களை கட்டுப்படுத்த அல்ல. மனித வாழ்க்கை என்றால் புலன்களை கட்டுப்படுத்த வேண்டும், புலன்களை நிர்வாணமாக திறக்க அல்ல. இது மனித வாழ்க்கையல்ல. கட்டுப்படுத்த. அதுதான் விலங்கிற்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு. விலங்கை கட்டுப்படுத்த முடியாது. மனிதன் நாகரீகமானவனாக இருக்க வேண்டும்... கட்டுப்படுத்தும் திறன் இருக்க வேண்டும். அதுதான் மனித நாகரீகம். அது தபஸ்ய என்று அழைக்கப்படுகிறது."
740109 - சொற்பொழிவு SB 01.16.12 - லாஸ் ஏஞ்சல்ஸ்