“சைதன்ய மதம் என்றால் கிருஷ்ண மதம். கிருஷ்ண-வர்ணம், வெறுமனே கிருஷ்ணரை விவரிப்பது. அதுவே அவருடைய வேலையாக இருந்தது. இவ்வாறாக கிருஷ்ணரை புரிந்து கொள்ளும் போது… பூரணமாக அன்று. கிருஷ்ணரை பூரணமாக புரிந்து கொள்ள முடியாது. அது சாத்தியமன்று. கிருஷ்ணரால்கூட தன்னை புரிந்து கொள்ள முடியாது, அவர் மிகப் பெரியவர். அதுவே மகத்துவம், “கடவுள் பெரியவர்,” எந்த அளவுக்கு என்றால், பெரியவரான கடவுளுக்குக்கூட தான் எவ்வளவு பெரியவர் என்பதை புரிந்து கொள்ள முடியாது. அதுவே கடவுள். யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் முடிந்தவரை நம்மால் சாஸ்திரம், சாது, குரு ஆகிய மூன்று மூலங்கள் வழியாக புரிந்து கொண்டு கிருஷ்ணர்தான் முழுமுதற் கடவுள் என்ற முடிவுக்கு வர முடியும்.”
|