"பூரணமாக கட்டுப்படுத்துபவர், ஈஶ்வர꞉ பரம꞉ க்ருʼஷ்ண꞉ (Bs. 5.1). கிருஷ்ணர் தான் பூரணமாக கட்டுப்படுத்துபவர். கிருஷ்ணரை கட்டுப்படுத்த எவரும் இல்லை. கிருஷ்ணர், பரமபுருஷர், கோவிந்தம் ஆதி-புருஷம், அவர் தான் மூலமானவர். எனவே யார் அவர் தாயும் தந்தையுமாக முடியும்? அவர் அனைவருக்கும் தந்தையாவார், பரமதந்தை. ஸர்வ-யோநிஷு கௌந்தேய ஸம்பவந்தி மூர்தயோ யா꞉ (BG 14.4). கிருஷ்ணர் கூறுகிறார், "வாழ்க்கையின் அனைத்து இனங்களிலும், பல வடிவங்கள் அங்கு இருப்பதால், நானே அவர்கள் அனைவருக்கும் உயிர் கொடுக்கும் தந்தையாவேன்." எனவே யாரும் கிருஷ்ணரின் தந்தையாக முடியாது. யாரும் கிருஷ்ணரை கட்டுப்படுத்துபவராக முடியாது. யாரும் கிருஷ்ணரின் குருவாக முடியாது. கிருஷ்ணர் பரமபுருஷ்ராவார். மத்த꞉ பரதரம்ʼ நான்யத் (BG 7.7): "என்னைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை." ஆனால் அவர் அன்பின் காரணத்தால் தாழ்வான நிலையை ஏற்றுக் கொள்கிறார். நீங்கள் கிருஷ்ணரை நேசித்தால்... மாயாவாதீ தத்துவவாதிகள், கிருஷ்ணருடன் ஒன்றாக இணைய, கிருஷ்ணரின் இருப்பில் ஒன்றிணைய மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள். அதுதான் அவர்களுடைய பூரணத்துவம். மேலும் வைஷ்ணவ தத்துவம் யாதெனில், "கிருஷ்ணருடன் ஒன்றாக மாற என்ன இருக்கிறது? நாம் கிருஷ்ணரின் தந்தையாக விரும்புகிறோம்."
|