"நீங்கள் குழந்தைகளை கிருஷ்ண பக்தனாக மாற்றுவதற்காக நேசித்தால், பிறகு அது கிருஷ்ணரை நேசிப்பதாகும். கிருஷ்ணர் விரும்புவது ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஶரணம்ʼ வ்ரஜ (BG 18.66). எனவே நீங்கள் உதவி செய்தால்... நம் இயக்கம் என்பது என்ன? நான் எதற்காக உங்கள் நாட்டிற்கு வந்தேன்? ஏனேன்றால் உங்களை கிருஷ்ண பக்தனாக மாற்றுவதற்காக. ஆக அங்கே கிருஷ்ணர் மீது நேசம் இருக்கும். இல்லையென்றால் எதற்கு... நான் உங்களிடம் வருவதற்கு என்ன வேலை இருக்கிறது? எனக்கு ஒரு வேலையும் இல்லை. ஏனென்றால் நான் கிருஷ்ணரை நேசிக்கிறேன், இந்த உலகில் இருக்கும் அனைவரும் கிருஷ்ண பக்தனாக மாறுவதை நான் பார்க்க வேண்டும், இல்லையென்றால் ஏன் இந்த வயதான காலத்தில் நாம் இவ்வளவுக்கு முயற்சி செய்ய வேண்டும்? அதேபோல், நீங்கள் உங்கள் குழந்தைகளை கிருஷ்ண பக்தனாக்க விரும்பினால், நூற்றுக்கணக்கான பிள்ளைகளை பெற்று மேலும் அவர்களை கிருஷ்ண பக்தனாக்குங்கள். அதுதான் கிருஷ்ணர் மீது உள்ள நேசம். ஆனால் நீங்கள் அவர்களை பூனையும், நாயுமாக மாற்றினால், பிறகு ஒரு பிள்ளை பெற்றாலும் அது பாவமாகும். ஆனால் அவர்களை கிருஷ்ண பக்தனாக்க முடியும் என்றால், நூற்றுக்கணக்கான பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள். அதுதான் கிருஷ்ண பக்தி. பகவத் கீதை கூறுகிறது, பிதா ந ஸ ஸ்யாஜ் ஜனனீ ந ஸா ஸ்யாத்: " ஒருவர் தந்தையாக கூடாது, ஒருவர் தாயாக கூடாது... ந மோசயேத்³ ய꞉ ஸமுபேத-ம்ருʼத்யும் (SB 5.5.18)," ... அவனால் பிள்ளைகளை உடனடியாக மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை என்றால்." அதுதான் நிலை."
|