TA/740112 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்களுக்கு மாவீரன் அலெக்ஸ்சாண்டரும் திருடனும் கதை தெரியுமா. மாவீரன் அலெக்ஸ்சாண்டர் ஒரு திருடனை கைதி செய்தார், மேலும் அவனை தண்டிக்கப் போகிறார். அந்த திருடன் மன்றாடினான், 'ஐயா, நீங்கள் என்னை தண்டிக்கப் போகிறீர்கள், ஆனால் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நான் ஒரு சிறிய திருடன், நீங்கள் ஒரு பெரிய திருடன். அவ்வளவுதான்'. (சிரிப்பொலி) 'நீங்கள் வலுக்கட்டாயமாக மற்றவர்களுடைய இராச்சியத்தை ஆக்கிரமிக்கிறீர்கள், மேலும் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் நீங்கள் பலசாளியாக இருப்பதால், அல்லது ஏதோ ஒரு வழியில் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததால், மேலும் நீங்கள் ஒவ்வொரு நாடாக வெற்றிக் கொண்டிருக்கிறீர்கள்... ஆக நானும் அதே காரியத்தை தான் செய்துக் கொண்டிருக்கிறேன். எனவே உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?' எனவே அலெக்ஸ்சாண்டர் கருதுகிறார் அதாவது 'ஆம், நான் ஒரு பெரிய திருடன் அல்லாது வேறொன்ரும் இல்லை, அவ்வளவுதான்'. அதனால் திருடனை அவர் விடுவித்தார்: 'ஆம், நான் உன்னைவிட சிறந்தவன் அல்ல'."
740112 - சொற்பொழிவு SB 01.16.17 - லாஸ் ஏஞ்சல்ஸ்