"கிருஷ்ண உணர்வு என்றால் தெய்வ பக்தி. மனித வாழ்க்கை பகவானை உணர்ந்து கொள்வதற்காக ஆனது. எனவே ஒவ்வொரு மத அமைப்பும் பகவானைப் பற்றிய கல்வியைக் கொடுப்பதற்கானது. அதுதான் அமைப்பு. நீங்கள் கிருஸ்துவ மதம் அல்லது இந்து மதம் அல்லது முஸ்லிம் மதத்தை எடுத்துக் கொண்டாலும், அதன் யோசனை பகவானை புரிந்துக் கொள்வது தான். ஆகையினால், நீங்கள் எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், அதனால் பரவாயில்லை. நீங்கள் பகவான் என்பவர் யார் என்று புரிந்துக் கொண்டு மேலும் பகவானுடன உங்கள் உறவு என்ன என்பதை புரிந்துக் கொண்டால், பிறகு நீங்கள் குறையற்ற முழுமையானவர்."
|