"கலியுகத்தின் அறிகுறிகள், இந்த ஸ்ரீமத் பாகவதத்தில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டுவிட்டது. இப்பொழுது நீங்கள் பார்க்கிறீர்கள் அதாவது இதஸ் ததோ வாஶன-பான-வாஸ꞉-ஸ்னான. இப்போது எங்கும், உலகம் எங்கிலும், இளவயது பெண்களும் மேலும் ஆண்களும், அவர்கள் எங்கு பொருத்தப்படுவார்கள், எங்கு குளிப்பார்கள், எங்கு சாப்பிடுவார்கள் அல்லது எப்படி... அவர்கள் உடலுறவு கொள்வார்கள் என்று அவர்களுக்கு தெரியாது. இல்லை. இது வாழ்க்கையின் அடிப்படை தேவைகள். ஒருவருக்கு வாழ ஒரு நல்ல இடம் இருக்க வேண்டும். ஒருவருக்கு உண்பதற்கு தேவையான உணவுப் பொருள்கள் இருக்க வேண்டும். தூக்கம். உண்ணவும், தூங்கவும், உறவு கொள்ளவும்—உடல் சார்ந்த தேவைகள். எனவே வேத நாகரீகத்தில், இந்த தேவைகள், ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அதனால் அவர்கள் தேவைகளை திருப்திப் படுத்துக் கொண்டு, அதே நேரத்தில், கிருஷ்ண பக்தராகி மேலும் வீடுபேறு பெற்று பரமபதம் அடைவார்கள்."
|