"கிருஷ்ணர் ஆன்மீக வானில் வாழ்கிறார், இந்த பௌதிக வானத்திற்கு அப்பால், மிகவும் உயரத்தில், மேலும் கிருஷ்ண-லோகத்தில், கிருஷ்ணரின் கிரகம், ஆன்மீக உலகத்தில் மிக உயர்ந்த கிரகம். இது ப்ரஹ்ம-ஸம்ʼஹிதா, கோலோக-நாம்னி நிஜ-தாம்னி தலே ச தஸ்ய (Bs. 5.43) கூறப்பட்டுள்ளது. மிக உயர்ந்த கிரகம் கோலோக, கோலோக வ்ருʼந்தாவன கிரகம். நீங்கள் படத்தைப் பார்த்திருக்கிறீர்கள். அது தாமரை மலர் போன்றது. எனவே கோலோக-நாம்னி நிஜ-தாம்னி: "அது அவர் தனிப்பட்ட இருப்பிடம்." தலே ச தஸ்ய, "அதற்கு கீழே," கோலோக-நாம்னி நிஜ-தாம்னி தலே ச தஸ்ய (Bs. 5.43), "அந்த கிரகத்திற்கு கீழே," கோலோக-நாம்னி நிஜ-தாம்னி தலே ச தஸ்ய தேவீ-மஹேஶ-ஹரி-தாமஸு. தேவீ. இந்த பிரபஞ்சம், இந்த பௌதிக பிரபஞ்சம், தேவீ-தாம என்று அழைக்கப்படுகிறது. தேவீ-தாம என்றால் பாதுகாப்பின் கீழ், அல்லது இயற்கை அன்னையின் மேற்பார்வையில் என்பதாகும். அதுதான் தேவீ-தாம என்று அழைக்கப்படுகிறது, பௌதிக இயற்கை."
|