"நாம் உண்மையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், நாம் விலங்குகளைப் போல் வாழக் கூடாது, எந்த கட்டுப்பாடும் இல்லாமல், எதுவும் இல்லாமல்... உங்கள் மாநிலத்தில் கூட, சரியான நிர்வாகத்திற்கு, அங்கே பல சட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் கூட... நீங்கள் தெருவிற்கு சென்றவுடன், அங்கே உடனே மாநில சட்டங்கள் இருப்பதை காண்பீர்கள், "வலது பக்கமாக செல்லவும்." ஒழுக்கம் அங்கே பின்பற்ற வேண்டும். அதுதான் தர்ம, ஒழுக்கம், மாநில சட்டத்தைக் கடைபிடக்க வேண்டும். அங்கு சில ஒழுக்கம் இருக்க வேண்டும். அதேபோல், நீங்கள் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய, ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஒழுக்கம் இல்லாமல், அது சாத்தியமில்லை. ஆதௌ குர்வாஶ்ரயம். ஆகையினால் ரூப கோஸ்வாமீ பக்தி-ரஸாம்ருʼத-ஸிந்துவில் கூறுகிறார் அதாவது ஒழுக்கம் என்றால் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் ஒருவர், அவர் சீடர் என்று அழைக்கப்படுகிறார். அனைவருக்கும் இது தெரியும். சீடர் என்றால் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் ஒருவர். ஒருவர் ஒழுக்கத்தை கடைபிடிக்கவில்லை என்றால், அவர் ஒரு சீடர் அல்ல. மேலும் ஒரு சீடர் அல்லாதவரின் வாழ்க்கை குழப்பமாக இருக்கும். அவரால் சந்தோஷமாக இருக்க முடியாது. ஆகையினால் வேதம் கூறுகிறது, அதாவது, "நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட குருவை ஏற்றுக் கொண்டு மேலும் அவருடைய அறிவுரைப்படி ஒழுக்கம் நிறைந்தவராக வேண்டும்." பிறகு நீங்கள் அறிவின் உயர்ந்த நிலையையும், வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் தெரிந்துக் கொள்வீர்கள், அதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவிர்கள்."
|