TA/740123 - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் உண்மையில் கிருஷ்ண உணர்வில் இருந்தால், இந்த குணங்கள் அவரிடமிருந்து வெளிப்படும். யஸ்யாஸ்தி பக்திர் பகவதி அகிஞ்சனா சர்வைர் ​​குணைஸ் தத்ர சமாசதே ஸுரா (SB 5.18.12). அதுதான் சோதனை. ஒருவர் உண்மையில் கிருஷ்ண உணர்வில் மேம்பட்டவராக இருந்தால், நீங்கள் அவரிடம் எந்தக் குறையையும் காண மாட்டீர்கள். அதுதான் கிருஷ்ண உணர்வு. யஸ்யாஸ்தி பக்திர் பகவதி அகிஞ்சநா, பரம புருஷ பகவானிடம் ஒருவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையும் பக்தியும் இருந்தால்—யஸ்யாஸ்தி பக்திர் பகவதி அகிஞ்சனா ஸர்வைர் ​​குணை—அனைத்து நல்ல குணங்களும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நல்ல குணங்கள் இவை: சத்யம், செளசம், சமோ தம, ஸந்தோஷ ஆர்ஜவம், சாம்யம், இப்படி பல, வைஷ்ணவத்தின் இருபத்தி ஆறு நல்ல குணங்கள். இந்த நல்ல குணங்கள் வெளிப்படும். அப்போது நமக்குப் புரியும், "ஓ, இதோ உண்மையில் ஒரு தூய பக்தர் . "
740123 - சொற்பொழிவு SB 01.16.26-30 - ஹானலுலு