TA/740128 - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆறு கொள்கைகள் உங்கள் பக்தி சேவையை அதிகரிக்கும். முதல் கொள்கை உத்ஸாஹாத். உத்ஸாஹாத் என்றால் "உற்சாகம்". "இந்த வாழ்க்கையில் நான் பூனைகள் மற்றும் நாய்களைப் போல இறக்க மாட்டேன். இந்த வாழ்க்கையில் என்னுடைய மரணம் என்னை உடனடியாக கிருஷ்ணரிடம் கொண்டு செல்லும் படி இருக்கும்." என்று ஒருவர் உறுதியாக இருக்க வேண்டும். இது த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதியில் கூறப்பட்டுள்ளது(BG 4.9). பொதுவாக இந்த ஆத்மாவின் உடல் மாற்றம் பலவிதமான வாழ்வில் நிகழ்கிறது, ஆனால் ஒருவன் தன் பக்தி வாழ்க்கையை முழுமையாக்கிக் கொண்டால், அவன் மரணத்திற்குப் பிறகு உடனடியாக கிருஷ்ணரிடம் செல்கிறான். த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி. எனவே இதுவே உறுதி, இதுவே இந்த வாழ்க்கை. அதுவே உத்ஸாஹாத், உற்சாகம் எனப்படும். "ஓ, நான் ஆன்மீக உலகில் கிருஷ்ணரிடம் செல்கிறேன்" என்று ஒருவர் மிகவும் உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் அவ்வளவு உற்சாகத்தை உணர வேண்டும். அதனால் அது உத்ஸாஹாத்."
740128 - சொற்பொழிவு Initiation - ஹானலுலு