"ஆன்மீக குருவிற்கு திருப்தியளிப்பதன் மூலம், ஒருவர் முழு முதற் கடவுளை திருப்திப்படுத்தலாம். யஸ்ய ப்ரஸாதாத், "ஆமீக குருவை திருப்திப்படுத்துவதின் மூலம்." ஸம்ʼஸார-தாவானல-லீட-லோக-த்ராணாய காருண்ய-கனாகனத்வம். இதுதான் ஒரு அறிகுறி, அதாவது ஆன்மீக குரு மிகவும் நேர்மையானவர். ஒருவரை ஆன்மீக குருவாக ஏற்றுக் கொள்ளும் முன்பாக அவர் நேர்மையானவரா என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அந்த நேரம் அளிக்கப்படும். நீங்கள் ஒருவரை ஆன்மீக குருவாக ஏற்றுக் கொள்ள விரும்பினால், நீங்கள் அவருடம் குறைந்தது ஒரு வருடமாவது தொடர்பில் இருக்க வேண்டும், காரியங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்று கவனியுங்கள் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் பின்பற்றினால், நிச்சயமாக, மற்றவைகளும், அதுவும் நன்றே. ஆனால் தனிப்பட்ட முறையில் அது அறிவுறுத்தப்படுகிறது அதாவது நீங்கள் தேர்ந்தெடுத்த ஆன்மீக குருவுடன் குறைந்தது ஒரு வருடமாவது இருக்க வேண்டும் என்று, அதனால் ஆன்மீக குருவிற்கும் உங்களை புரிந்துக் கொள்ளும் வாய்ப்பு, அதாவது நீங்கள் அவரால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடையவரா என்று அறிந்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பு அவருக்கும் கிடைக்கிறது. இதுதான் செயல்முறை."
|