"பூரண பரம உண்மையைப் பற்றி எவ்வாறு தெரிந்துக் கொள்வது—அதுதான் கல்வி. ஆனால் பல்கலைக்கழகம், அவர்களுக்கு எவ்வாறு சாப்பிடுவது, எவ்வாறு தூங்குவது என்று கல்வி கற்றுக் கொடுக்கிறது. பகவான் மனித சமூதாயத்திற்கு மகத்தான உணவுப்பொருட்களை கொடுத்து இருப்பினும், அவர்கள் பல உண்ணக்கூடிய பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள், வேறுபட்ட உண்ணக்கூடிய பொருள்கள். இந்த பழங்களைப் போல், இவை மனிதர்களுக்காக படைக்கப்பட்டவை. அவை பூனைகளும் நாய்களும் உண்ணக்கூடிய உகந்த பொருள்கள் அல்ல. அவை மனிதர்களுக்கானது. எனவே ஏகோ பஹூனாம்ʼ யோ விததாதி காமான் (கட உபநிஷத் 2.2.13). கிருஷ்ணர், முழு முதற் கடவுள், வழங்கியுள்ளார். அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் மகத்தான உணவுப் பொருள்களை அளித்துக் கொண்டிருக்கிறார். தேன த்யக்தேன புஞ்ஜீதா (ISO 1). ஆனால் அங்கே ஒதுக்கீடு உள்ளது. பன்றிகளுக்கு, உணவுப் பொருள் மலமாகும், மேலும் மனிதர்களுக்கு, உணவுப் பொருள்கள்—பழங்கள், பூக்கள், தானியங்கள், பால், சர்க்கரை. எனவே பகவான் ஒதுக்கீடு செய்தது போல், நீங்கள் உங்கள் உணவாக பயன் படுத்திக்கொள்ளுங்கள். சாப்பிடுவது அவசியம். பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்."
|