TA/740222 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"புலன்களின் இன்பம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது. அதுவே நமது நடைமுறை அனுபவம். புலனின்பத்தில் ஈடுபடும் எவரையும் அழைத்து, 'நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?' அவர் சொல்லவே மாட்டார். நடைமுறையில் பார்த்தோம். இந்த ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள், அவர்களுக்கு போதுமான புலன் திருப்தி உள்ளது. புலன் திருப்தி என்பது பணம் மற்றும் பெண்கள். அதனால் அவர்களுக்கு போதுமான அளவு கிடைத்துள்ளது. இதை நிராகரித்து ஏன் என்னைப் பின்தொடர்கிறார்கள்? ஏனென்றால் புலன் திருப்தி உங்களுக்கு ஒருபோதும் திருப்தியைத் தராது. அது தவறான திருப்தி. நீங்கள் கிருஷ்ணரை திருப்திப்படுத்தும்போதுதான் உண்மையான திருப்தி. அதுதான் திருப்தி.
கிருஷ்ணாேந்திரிய-திருப்தி-வாஞ்சா-தாரே 'பிரேம' நாம
ஆத்மேந்திரிய-திருப்தி-வாஞ்சா தாரே நாம 'காமா
(CC Adi 4.165)

நீங்கள் உட்கார்ந்த போது. . . உங்கள் புலன்களை திருப்திப்படுத்த விரும்புகிறீர்கள், பிறகு நீங்கள் காமா, காமத்தின் பிடியில் இருக்கிறீர்கள். ஆனால் அதே முயற்சி, நீங்கள் கிருஷ்ணரின் புலன்களை திருப்திப்படுத்த விரும்பினால், அது பிரேமம் அல்லது பக்தி என்று அழைக்கப்படுகிறது."

740222 - சொற்பொழிவு BG 07.07 - மும்பாய்