"ஸங்கீர்தன செயல்முறையினால் அனைவரையும் கிருஷ்ண உணர்விற்கு செல்ல விழித்துக்கொள்ள செய்வது, கிருஷ்ணரின் சேவகனாக நிச்சயமாக அது நம் கடமை, ஆனால் மக்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், அதாவது கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ளாமல், ஒருவர் தற்கொலையில் ஈடுபடுகிறார்—அவர் சொந்த தொண்டையை வெட்டிக் கொள்கிறார், அல்லது விஷம் குடிக்கிறார். நீங்கள் விஷம் குடிக்க விரும்பினால், இல்லை... எவரும் உங்களை கவனிக்க முடியாது, அதுதான் உண்மை. நீங்கள் தொண்டையை வெட்டிக் கொள்ள விரும்பினால், எவரும் உங்களை கவனிக்க முடியாது. ஆனால் இது சரியான வேலை அல்ல. இந்த மானிட வாழ்க்கை நமக்கு கிடைத்திருப்பது கிருஷ்ணரை புரிந்துக் கொள்வதற்காக தான். அதுதான்... நம் ஒரே வேலை. அதுதான் சைதன்ய மஹாபிரபுவின் போதனை. மேலும் கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் பகவத் கீதையில் கற்பிக்கிறார், மேலும் நாம் ஏன் இதை பயன்படுத்திக் கொண்டு நம் வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்றிக் கொள்ளக் கூடாது?"
|