"எனவே கிருஷ்ணருடன் விளையாட, கிருஷ்ணருடன் தோழமை கொள்ள, கிருஷ்ணருடன் நடனம் ஆடுவது, அது சாதாரண விஷயமல்ல. நாம் அதை செய்ய விரும்புகிறோம். அதை இங்கே செய்ய விரும்புகிறோம். நமக்கு பல விளையாட்டு சங்கம், நடனமாடும் சங்கம் இருக்கிறது, ஏனென்றால் நாம் அதை செய்ய விரும்புகிறோம். ஆனால் நாம் இதை இந்த பௌதிக உலகில் செய்ய விரும்புகிறோம். அதுதான் நம் குறைபாடு. அதே விஷயத்தை, நீங்கள் கிருஷ்ணருடன் செய்யலாம். சும்மா கிருஷ்ண பக்தனாகுங்கள் மேலும் உங்களுக்கு அந்த வாய்பு கிடைக்கும். நீங்கள் ஏன் இங்கு விளையாட்டிற்கும் மேலும் நடனத்திற்கும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? அதைத்தான், தர்மஸ்ய ஹ்ய் ஆபவர்க்யஸ்ய (BG 4.9) என்று அழைக்கிறோம். ஏனென்றால் நாம் இந்த ஜட உடலை பெற்றிருக்கிறோம். இந்த ஜட உடல் என்றால் அனைத்து துன்பங்களுக்கும் நீர்த்தேக்கம். செயற்கை முறையால், விஞ்ஞானத்தின் முன்னேற்றம் என்று அழைக்கப்படுவதை, நாம் இணைக்க முயற்சி செய்கிறோம், ஆனால் அது உண்மையான சந்தோஷ்ம் அல்ல."
|