"கிருஷ்ணரின் சக்திகளில் முக்கியமாக மூன்று குறிப்பிடத்தக்கவை: பௌதிக சக்தி, ஆன்மீக சக்தி மேலும் நடுதர சக்தி. நாம், நடுதர சக்தி. நாம் நடுதரம் என்று அழைக்கப்படுகிறோம் ஏனென்றால் நாம் சக்தியின் கீழ் வாழ்கிறோம், மற்றொறு மேன்மையான சக்தியின் கீழ். எவ்வாறு என்றால், நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் போது, நீங்கள் கண்காணிப்பாளரின் கீழ் வேலை செய்ய வேண்டும், சுதந்திரமாக அல்ல. அதேபோல், நம் நடுதர நிலை என்றால் நாம் பௌதிக சக்தியின் வழிகாட்டலின் கீழ் வாழலாம், அல்லது ஆன்மிக சக்தியின் வழிகாட்டலின் கீழ் வாழலாம். ஆன்மிக சக்தியின் வழிகாட்டலின் கீழ் வாழ்வதே நம் உண்மையான வாழ்க்கை. மேலும் பௌதிக சக்தியின் வழிகாட்டலின் கீழ் வாழ்வதை, மாயா, பொய்யானது என்று அழைக்கப்படுகிறது. ஆகையினால் நாம் நடுதரம்; நாம் நம்முடைய தேர்வை செய்துக் கொள்ளலாம்."
|