"வ்யாஸதேவ, அவருடை ஆன்மீக குரு நாரதரின் அறிவுறுத்தலின்படி, பக்தி யோகாவில் தியானம் செய்தார், மேலும் அவர் முழு முதற் கடவுளை பார்த்தார். அபஶ்யத் புருஷம்ʼ பூர்ணம். பூர்ணம் என்றால் முழுமை. எனவே நாமும் புருஷ, உயிர் வாழிகள். புருஷ என்றால் அனுபவிப்பவர். எனவே நாமும் அனுபவிக்க முயற்சி செய்கிறோம், ஆனால் நாம் முழுமை பெறாதவர்கள், முழுமை அடையாதவர்கள். நமக்கு அனுபவிக்க நிறைய ஆசைகள் இருக்கிறது, ஆனால் நம்மால் முடியாது, ஏனென்றால் நாம் முழுமை அடையாதவர்கள். அங்கே இருக்கிறது... வித்யாபதியால் பாடப்பட்ட அந்த பாடல், தாதல ஸைகதே வாரி-பிந்து-ஸம (ஶ்ரீல வித்யாபதி டாகுர). தாதல ஸைகதே. சூடான மணல் கடற்கரையில் உங்களுக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். ஆனால் யாரோ ஒருவர் சொன்னால், 'சரி, நான் தண்ணீர் விநியோகம் செய்கிறேன்'. 'எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்'. 'இல்லை, ஒரு சொட்டு'. எனவே அது எனக்கு திருப்தி அளிக்காது. எனவே நமக்கு பல ஆசைகள் உள்ளன. வாழ்க்கையின் பௌதிக முன்னேற்றத்தால் அது நிறைவேற்றப்படாது. அது சாத்தியமல்ல."
|